சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துச் சேர்த்தமைத் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் வைத்தியர் செய்கு ஷியாப்தீன் மொஹமட் ஷாபியை விசாரணையின் பின்னர் விடுதலை செய்யுமாறு, முஸ்லிம் மத அலுவல்கள், தபால் அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (25) ஜனாதிபதியின் செயலகத்தில் வைத்து இந்தக்கோரிக்கையை விடுத்தாரென, அமைச்சரின் குரல் பதிவுடன் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் குறித்து அமைச்சர் ஹலீமிடம் நாம் வினவியபோது “ தான் அவ்வாறு விடுதலை செய்யுமாறு எவ்விதக் கோரிக்கையும் விடுவிக்கவில்லையென மறுத்ததுடன், விசாரணையை துரிதப்படுத்துமாறே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும்“ அமைச்சர் எமது தமிழ் மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment