புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது.
ரமழான் மாதத்தில் மூன்று நேரங்கள் இருக்கின்றன.
எவ்வளவு முக்கியமான வேலையாக இருப்பினும் அம்மூன்று நேரங்களையும் அலட்சியம் செய்யாமலிருக்க முயற்சிப்போம். ஏனெனில், ஒரு மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கைக்கு அந்நேரங்கள் சமமாக இருக்கின்றன. எனவே, அந் நேரங்களைப் பேணிக் கொண்டு, அவற்றை வணக்க வழிபாடுகளில் கழிக்கும் போது மொத்தம் 90 மணித்தியால வணக்கங்களின் நன்மைகளை ஒரு நாளிலேயே சம்பாதித்துக் கொள்ள முடியும் . அவை,
🌙 நோன்பு திறக்கும் நேரம். இப்தாருக்குரிய ஏற்பாடுகளை நேர காலத்துடன் முடித்துக் கொண்டு, பிரார்த்தனை செய்வதில் முழுமையாக எங்களை ஈடுபடுத்திக் கொள்வோம். ஏனெனில், நோன்பாளி இப்தாருடைய நேரம் கேட்கும் துஆ மறுக்கப்பட மாட்டாது. எனவே, எங்களுக்காகவும் எங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் பிராத்திப்பதற்காக அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வோம். பிரார்த்தனையின் போது மரணித்தவர்களை மறந்துவிடக் கூடாது. ஏனெனில், எங்கள் துஆவின் பால் அவர்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றனர்.
🌙 * இரவின் இறுதிப் பகுதி.* அல்லாஹ்வுடன் தனிமையில் உறவாடுவதற்குரிய நேரமாக இந்நேரத்தை ஆக்கிக் கொள்வோம். ஏனெனில், "நான் கொடுப்பதற்காக என்னிடம் கேட்போர் யாரும் உள்ளனரா? " , "நான் மன்னிப்பதற்காக என்னிடம் மன்னிப்புக் கோறும் எவரும் உள்ளனரா?" என்று அல்லாஹ் அழைத்துக் கொண்டிருக்கும் பாக்கியமிக்க நேரமது. அதனால் இந்நேரத்தில் அதிகம் பாவ மன்னிப்புக் கோறுவோம்.
🌙 * பஜ்ர் தொழுகை முடிந்ததிலிருந்து சூரிய உதயம் வரையிலான நேரம். தொழுத இடத்திலே அமர்ந்திருந்து அல் குர்ஆனை ஓதுதல், இறை சிந்தனை போன்றவற்றில் இந்நேரத்தைக் கழிப்போம் .
*
✨ இந்நேரங்களைப் பேணி, வணக்கங்களில் ஈடுபடுவதுடன் ஏனைய நேரங்களில் திக்ர் (இறை நினைவு) செய்தல், புறம் பேசுவதிலிருந்து தவிர்ந்து நடத்தல் போன்றவற்றில் கரிசனையாய் இருப்போம். மேலும், கடமையான தொழுகைகளைத் தவறாமல் நிறைவேற்றுவதற்கு மனதளவில் உறுதி கொள்வோம். மேலும், உபரியான வணக்கங்களை முடியுமான அளவு அதிகரிக்க முயற்சிப்போம். ஏனெனில், இந்த முப்பது நாற்களும் விரைவாகவே சென்று, ரமழான் மாதமும் நிறைவு பெறும்.
📞 மூன்று வகையான துஆக்கள் இருக்கின்றன. அவற்றை ஸுஜூதில் அல்லாஹ்விடம் கேட்பதற்கு மறக்கக் கூடாது.
1⃣ இறைவா! என்னுடைய இறுதி முடிவை சிறப்பானதாக ஆக்கி வைப்பாயாக.
2⃣ இறைவா! நான் மரணிக்கு முன்னர் நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக.
3⃣ உள்ளங்களைப் புறட்டுபவனே! உனது மார்க்கத்திலே எனது உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக.

Post a Comment
Post a Comment