உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலை அடுத்து முப்படைகளின் தீவர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மலையகத்திலும் அனைத்து ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைக்காக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு செல்லும் பைகளை பொலிஸார் சோதனை செய்த பிறகு தான் பாடசாலைக்குள் அனுமதித்துள்ளனர்.
பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர்.
தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களின் இரண்டாம் தவணை பாடசாலை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment