மினுவாங்கொடையில் கலகம் விளைவித்தோருக்கு விளக்க மறியல்




மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று இரவு குழப்பத்தை தோற்றுவித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரையும், விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

09 பேரையும் இந்த மாதம் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் உட்பட பள்ளிவாசல்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டன.