“இது எமது நாடு. தயவுசெய்து எமது இலங்கையை அழிக்க வேண்டாம். ஒவ்வொருவர் மீது வெறுப்புடன் செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் எப்போதும் அபிவிருத்தி அடைய முடியாமல் போய்விடும்.”
– இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பில், தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். எமது எதிர்காலமும் உங்களது தற்போதைய நடவடிக்கையில்தான் இருக்கின்றது. அன்பைப் பரப்புங்கள். இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம்” என்றும் திமுத் கருணாரத்ன தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment