இலங்கையில் பல பகுதிகளில் அமைதி குலைவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்படியாக உத்தரவு பிறப்பித்துள்ளது இலங்கை போலீஸ்.
வடமேல் மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த பின்னணியில், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்குமாறு பொலிஸார் அறிவித்தனர்.
இதன்படி, கொழும்பின் பல பகுதிகளிலும் பொலிஸார் வீதிகளில் இறங்கி, அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவித்தனர்.
அத்துடன், வீதியிலுள்ள மக்களை விரைவில் தமது வீடுகளை நோக்கி செல்லுமாறும் பொலிஸார் அறிவித்து வருவதைப் பார்க்கமுடிகிறது.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள் தற்போது சன நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது.
அத்துடன், அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் மற்றும் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
Post a Comment
Post a Comment