கர்த்தினலை சந்தித்த முஸ்லிம் தலைமைகள்




முஸ்லிம் சமய மற்றும் அரசியல் தலைவர்கள் இன்று கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அவர்களை சந்தித்து இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களுக்கு ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள அவர்கள், அரசு இதுகுறித்து சரியான விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் சிரேஷ்ட அரசியல்வாதி பௌஸி, அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுதீன், கபீர் ஹாஷிம், பாராளுமன்ற உறுப்பினர்கான மரைக்கார், முஜீபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட மத தலைவர்கள் கலந்துகொண்டனர்