அக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்று டீண்ஸ் வீதியில், தமது வீட்டில் நிலத்தில் கிடந்த கிணற்றுக் கொட்டில் ஏறி விளையாடும் போது,கொட்டின் கொங்கிறீட் பாகம் தலையில் வீழ்ந்து சிறுமியொருவர்,  உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி கடுங்காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,பின்னர் மட்டக்களப்பு  ஆதார வைத்தியசாலைக்கு - மாற்றப்பட்டார். அங்கும் சிகிச்சை பலனின்றி இச் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி, அக்கரைப்ற்று இல்யாஸ் மார்க்கெற்றிங் உரிமையாளர் இல்யாஸ் ஹாஜியின் தரம் 6 ல் கல்வி கற்கும் நுஸ்ரத் என்னும் மகளாகும்

இச் சிறுமியின்  ஜனாசா தற்போது மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.