உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்காக முப்படையினரும், பொலிஸாரும் தற்போது தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை தற்போதைய நிலைமைக்கு மத்தியில் பொதுமக்களின் வாழக்கைக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு தடைகள் ஏற்படாத வகையில், அவற்றை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் வர்த்தக நடவடிக்கைகள் வழமையான முறையில் இடம்பெறுவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, போக்குவரத்து நடவடிக்கைகள் முறையாக நடைபெறுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் இரவு தபால் ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து காலி வரை இடம்பெறுவதுடன். இரவு தபால் ரயில் சேவை மாத்திரம் இடம்பெறவில்லை. அது தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதற்கு ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வழமையான நாளாந்த நேர அட்டவணைக்கு அமைவாக பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன. அத்தோடு நிலவும் தற்போதைய நிலைமைக்கு அமைவாக பயணிகளின் தேவையின் அடிப்படையில் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும், கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதில்லை. தனியார் பஸ்களையும் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பஸ்களில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமையான முறையில் இடம்பெறுகிறது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனைத்து சேவைகளும் எந்தவித தடைகளும் இன்றி நடைபெறுவதுடன், தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
Post a Comment
Post a Comment