சாய்ந்தமருதில்அதிரடிப்படையினருக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் துப்பாக்கி சூடு




சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. 

அப்பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குழு ஒன்றினால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் மருந்து வகைகளும் மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன் ஐ.எஸ் அமைப்பின் இலாஞ்சனையுடனான கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை அடுத்து, அம்பாறை பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்