தேசிய ஏற்றுமதி விருது பெற்ற தற்கொலைதாரி இன்ஷாப்!




#DailyMailOnline
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய சகோதரர்களில் ஒருவரான இன்ஷாப் இப்ராஹிம் 2016ஆம் ஆண்டுக்கான தேசிய ஏற்றுமதி விருதைப் பெற்றுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த விருதை அப்போதைய இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்து பெறும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் படங்களை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘டெய்லி மெயில்’ பத்திரிகை மற்றும் சி.என்.என் செய்தி நிறுவனம் ஆகியன வெளியிட்டுள்ளன.
அந்தப் படங்களில் ஒன்றில் இன்ஷாப்புக்கு இராஜாங்க அமைச்சர் கைலாகு கொடுப்பதையும், மற்றைய படத்தில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல வர்த்தகரும் தற்கொலைதாரியின் தந்தையுமான இப்ராஹிம், இராஜாங்க அமைச்சரிடம் இருந்து விருதைப் பெறுவதையும், விருதுக்குரிய இன்ஷாப் மகிழ்ச்சியுடன் அருகில் நிற்பதையும் காணலாம்.