நாட்டில் தவ்பீக் ஜமாத்தின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் சென்று பயிற்சி எடுத்துவிட்டு வந்ததாக அன்று பாராளுமன்றத்தில் நான் கூறிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்களும், அமைச்சர்களும் தனக்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி இந்த செய்தியை வெளியிட்டோம். இந்த செய்தியை வெளியிட்ட என்னை சில முஸ்லிம் எம்.பி.க்கள் சபித்தனர்.
பலருடைய மனித உயிர்களைப் பறித்த இந்த பயங்கரவாத சம்பவத்துக்குரிய பொறுப்பை இந்த முஸ்லிம் எம்.பி.க்களும், அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
Post a Comment
Post a Comment