சம்பா, நாட்டரிசி விலைகள் குறைப்பு!




சம்பா மற்றும் நாட்டரிசி வகைகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக, அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், ஒரு கி.கி.  நாட்டரிசியின் விலை 15 ரூபாவினாலும், ஒரு கிலோ கிறாம் சம்பா அரிசியின் விலை 20 ரூபாவினாலும் குறைந்துள்ளது.
கடந்த 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், சம்பா மற்றும் நாட்டரிசி வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு அறுவடை அதிகரித்துள்ளதால், இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், தற்போது காணப்படும் அரிசி வகைகளுக்கான விலைகள் மேலும் குறைவடையக்கூடிய சாத்தியமுள்ளதாக, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )