மண்ணின் மைந்தர்கள்






(க.கிஷாந்தன்)
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் கிறேக்கிலி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மண்ணின் மைந்தர்கள் எனும் தொனிப்பொருளில் கௌரவிப்பு விழாவும், இசை நிகழ்ச்சியும் கிறேக்கிலி தோட்டத்தில் இடம்பெற்றது.
தோட்டத்தின் பெருமையினை நாடரிய செய்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத், சிறப்பு அதிதியாக கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் எம்.ஜெயகாந்த், விசேட அதிதியாக இலங்கை வங்கியின் தலவாக்கலை கிளையின் முகாமையாளர் எம்.ராமன், மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் அரியமுத்து என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டதோடு, ஸ்டைல் இசைக்குழுவின் தலைவர் ரஜனி தலைமையிலான இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.