இரண்டு பரீட்சைகள் பிற்போடப்பட்டன




சுகாதாரம், போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் நடத்தப்பட இருந்த குடும்ப சுகாதார அதிகாரிகளின் வினைத்திறன் காண் பரீட்சை மற்றும் வைத்திய அதிகாரிகளின் திணைக்கள பரீட்ரை ஆகியன பிற்போடப்பட்டுள்ளன. 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமையின் காரணமாக குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. 

அந்தப் பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதாரம், போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு கூறியுள்ளது.