மைத்திரி – மஹிந்த சந்திப்பு உடன்பாடின்றி நிறைவு




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று (04) நடைபெற்ற கலந்துரையாடல் உடன்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை (05) நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இன்று மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் அறை இலக்கம் 01 இல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மம்பில, துமிந்த திஸாநாயக்க, விமல் வீரவங்ச, மஹிந்த அமரவீர ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.