இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்பு




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள 10 அணிகளும் தங்களை தயார் படுத்தி வருகின்றன. நியூசிலாந்து அணி முதன்முதலாக தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணி கடந்த நான்கு வருடங்களாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது நம்பர் ஒன் அணியாக இருக்கும் இங்கிலாந்து, சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் முதன்முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார்.





இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து இதுபோன்ற திருப்தியான வீரர்களை கொண்ட அணியுடன் முதல்முறையாக உலகக்கோப்பைக்கு செல்கிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே சிறப்பாக தெரிகிறது. அந்த அணியின் ஒவ்வொரு துறையும் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.