தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து (29) மாலை 3:45 மணியளவில், அம்பாறை மாவட்டம் ஒலிவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் விடுதி, அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் தேடுதலில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
நூற்றுக்கணக்கான படையினர் இத் தேடுதலில் பங்கேற்றதுடன், கனகர வாகனங்களும் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment