ஒலுவில் பிரதேசத்தில் பெண்ணொருவரைத் துஸ்பிரயோகம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரையும், அதற்குத் துணைபுரிந்த மற்றுமொரு சந்தேக நபரையும் எதிர்வரும் 23ந் திகதி வரை விளக்கமறியலில் வைதற்க்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிபதி,பெருமாள் சிவக்குமார் இன்று கட்டளை பிறப்பித்தார்.
நேற்றைய தினம், இரவு வேளையில்,கையில் நீர் எடுப்பதற்காக வந்த பெண்ணொருவரை,கையைப் பிடித்து துஸ்பிரயோகம் ஒருவர் செய்துள்ள அதேவேளை மற்றைய நபர், பாதிப்புற்ற பெண்ணிடம், குறித்த முதலாவது சந்தேக நபர் கேட்பதற்கெல்லாம் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டியதாகவும் அக்கரைப்பற்று நீதிமன்றில் பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள்,”தாம் மது போதையில் பாடல் கேட்டுக் கொண்டு மூடிய அறைக்குள் இருந்தாகவும், பள்ளிவாயலில் தொழுகைக்கான அழைப்பு ஒலித்திருந்திரும் பாடலை நிறுத்தாமல் இருந்தாகவும், அதனை அவதானித்தவர்கள், தமது அறையை உடைத்து வந்து தம்மைத் தாக்கியதாவும், தாம் எந்தவொரு பெண்ணையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்யவில்லையென்றும்” தமது சட்டத்தரணி மூலம் செய்திருந்திருந்தனர்.
Post a Comment
Post a Comment