மதுபோதையில் வாகனங்களை செலுத்துவோருக்கெதிராக நடவடிக்கை




மதுபோதையில் வாகனங்களை செலுத்துபவர்களை கைது செய்வதற்காக இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி விசேட சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பண்டிகைக் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் 2,400 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)