கிரிக்கட் வீழ்ச்சியடைந்துள்ளது




தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிரிக்கட் விளையாட்டு வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். 

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் தலைவருக்கே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

தற்போது கிரிக்கட் நிர்வாகத்தில் இருக்கின்ற நபர்கள் ஜனாதிபதியையும் சேர்த்துக் கொண்டு கிரிக்கட் விளையாட்டை அழித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.