நான் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சரும் இல்லை, சட்டம் ஒழுங்கு அமைச்சரும் இல்லை எனவும் இந்த அரசாங்கத்தில் அமைச்சர் என்ற வகையில் வெட்கப்படுகின்றேன், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன் எனவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நாட்டின் சகலரும் இன, மத பேதமின்றி இந்த நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்போம்.
வனாத்தவில்லு பிரதேசத்தில் வெடிபொட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றமை உண்மையா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,
நேற்றைய வெடிப்புச் சம்பவங்கள் கடந்த நத்தார் தினத்தன்று மாவனல்லை சம்பவத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு நடவடிக்கையாகும். இதில் ஒரே குழுவினர் தான் உள்ளனர். இந்த அடிப்படைவாதக் குழுவுக்கு வெளிநாட்டு தொடர்பு காணப்படுகின்றது. இதனை ஒன்றிணைந்து அழித்தொழிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
Post a Comment
Post a Comment