எனக்கு குண்டு துளைக்காத கார் வேண்டாம். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்” என்று கத்தோலிக்கப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரஸ்தாபித்திருந்தார். இந்த நிலையிலேயே, பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment