அடிக்கல் நாட்டு விழா






(க.கிஷாந்தன்)

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தின் மைதானத்தை புனரமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா பாடசாலையின் அதிபர் உபுல் இந்திரஜித் தலைமையில் 02.04.2019 அன்று நடைபெற்றது.

குறித்த பாடசாலையின் மைதானம் பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்துள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் விளையாட்டுத்துறையில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

இதனையடுத்து இப்பிரச்சினையை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து ஒரு கோடி 13 இலட்சம் ரூபா செலவில் இந்த பாடசாலைக்கான மைதானத்தை புனரமைக்க மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரத்தினால் 02.04.2019 அன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், எம்.ராம், ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரணசிங்ஹா, அம்பகமுவ பிரதேச சபை தலைவர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.