கல்முனையில் பலஸ்தீன் துாதர்




பாறுக் ஷிஹான்  

பலஸ்தீன் தூதுவர்   பலஸ்தீன் புனித பூமி தொடர்பில்   கல்முனை மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

இன்றைய தினம்(1) மதியம் கல்முனை பசார் பள்ளிவாசலுக்கு சென்ற அவர் ளுஹர் தொழுகையின் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பலஸ்தீன் புனித பூமி தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கி ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் Dr. Zuhair M.H. Dar Zaid,  அண்மைக்காலமாக  பலஸ்தீன் புனித பூமி இடம்பெற்று வரும் வன்முறை தொடர்பாகவும் ஏனைய நாடுகளின் ஆதரவினை கோரியும் பல நிகழ்வுகளில்   உரையாற்றி வருவது  குறிப்பிடத்தக்கது.