தமிழ் சினிமாவை படைப்பிலயக்கத்தின் அருகில் வைத்த பெருமை இயக்குநர் மகேந்திரனையே சேரும். சினிமாவில் யதார்த்தங்களையும், நடைமுறை வாழ்க்கையையும் அப்படியே பிரதிபலிக்கச் செய்தவர் அவர்.
அவரின் படைப்புகள் பல புத்தக நாவல்களைத் தழுவியவை. இப்படியான சிறப்புக்குரிய அவர் இன்று காலை 10 மணிக்கு தன் 79ஆவது வயதில் காலமானார் என்ற செய்தியால் பலருக்கும் வருத்தமே.
அவரின் காலத்தில் மற்றொரு முக்கிய இயக்குநராக இருந்த பாரதிராஜா அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு கதறியழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகேந்திரனின் உடல் சென்னை பள்ளிக்கரனை அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
காலை முதலே சினிமா பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகரும் மகேந்திரனின் நெருங்கிய நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் மகேந்திரன் உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மகேந்திரனின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அழுதவாறு அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment
Post a Comment