கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று ( 06) இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்பித்தார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்றவர்களின் அனுசரணையிலேயே தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, குறித்த விழா நடைபெற்றது.
பாரம்பரிய நிகழ்வுகளுக்கு முன்னுரிமையளித்து இடம்பெற்ற விழாவில் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஜனாதிபதி கொண்டை பலகாரம் சுட்டதுடன், சிங்கள பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்றான றபானை அடித்தும் நிகழ்வில் பங்கேற்றவர்களை மகிழ்வித்தார்.
Post a Comment
Post a Comment