காலநிலை விபரம்




தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது வட அகலாங்கு 4.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.1E இற்கும் அருகில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 800 கிலோமீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது. 

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும் தொடர்ந்து ஓரு சூறாவளியாகவும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இத்தொகுதி வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை அண்டியதாகவும் விலகியும் நகரக்கூடுவதுடன் 2019 ஏப்ரல் 30ஆம் திகதிமாலை அளவில் (இந்தியா) வடதமிழ்நாட்டுக் கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது 

பொதுமக்களும்கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். 

வளிமண்டலவியல் திணைக்களம்