அளுத்கம, தர்கா நகர், பேருவளை வரக்காபொல, கட்டான சுற்றிவளைப்புக்களில் 18 பேர் கைது




நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கம, தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை, கங்காவங்கொட பகுதியில் 5 பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதனுடன் கட்டான, கட்டுவாபிட்டிய பகுதியில் ஆறு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல பொலிஸ் அதிகாரிகளுக்கும் இணைந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய அங்குருவெல்ல பகுதியில் வீடொன்று சோதனையிடப்பட்ட நிலையில், அங்கிருந்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றும், தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.(