#ThankYouImranKhan இந்தியா வந்தார் #விங் கமாண்டர் அபிநந்தன்






பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தாயகம் வந்தார் அபிநந்தனை வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
9:23 PM: வாகா எல்லையில் கதவுகள் திறக்கப்பட்டு, அபிநந்தன் இந்தியாவுக்குள் நுழைந்தார்.
9:16 PM: இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு வந்தடைந்தார் விங் கமாண்டர் அபிநந்தன்.
8:30 PM: அபிநந்தன் 6 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 8:30 மணி ஆகியும் அவர் ஒப்படைக்கப்படவில்லை. தாமதத்திற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் இல்லை.
7:20 PM:இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவுக்குள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள வாகா-அட்டாரி எல்லைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.
6:55 PM:இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் இருநாடுகளுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக பிபிசி உருது சேவையின் செய்தியாளர் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.
6:20 PM: இந்திய எல்லைக்குள் தொடர்ந்து பாதுகாப்பு படைகளை சேர்ந்த வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அபிநந்தனின் வருகையை எதிர்நோக்கி பல்வேறு தரப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கனோர் காத்திருக்கின்றனர்.