JVPயுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள TNA




தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது. 

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்திலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. 

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

மக்கள் விடுதலை முன்னணியின் சார்ப்பில் தலைவர் அனுர திஸாநாயக்க, டில்வின் சில்வா மற்றும் கே.டி லால்காந்த ஆகியோர் கலந்த கொண்டுள்ளனர்.