ராணமடு பிரதேசத்தில்,ஒருவர் கொலை




தனிப்பட்ட குரோதம் காரணமாக எற்பட்ட மோதலில் வெல்லாவெளி, ராணமடு பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

அம்பாறை, மத்திய முகாம் பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வயல் நிலம் தொடர்பில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்ததால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கொலை சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பிரதேசத்தைச் ​சேர்ந்த 33, 34 மற்றும் 40 வயதுடைய மூன்று பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.