உச்சம் தொட்டது வெப்பம் ! அதிகளவு நீர் பருகுமாறு அறிவுறுத்தல்!!




காற்றுடன் கூடிய சீரற்ற செயற்பாட்டின் காரணமாக உடலில் உள்ள வெப்பத்தின் அளவு ஓரளவு அதிகரித்து இருப்பதாக சுகாதார அதிகாரி சுட்டிகாட்டியுள்ளார்.
இதனால் கூடிய அளவு தண்ணீரை பருகுவதன் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியும்.
இதேபோன்று எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியில் ஆகக்கூடிய வெப்பம் காணப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது திறந்த வெளியில் செல்லும் போது அவதானத்துடன் செல்ல வேண்டும்.
சூரிய வெளிச்சம் நேரடியாக விழும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் நீண்ட நேரம் இருக்கக்கூடாது என்றும் சிறு பிள்ளைகளை வாகனத்துக்குள் இருப்பதை தவிர்த்து கொள்வதாகவும் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.