புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு




இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தொழில்நுட்ப கல்வி தொடர்பில் தேசிய டிப்ளோமாவை வழங்குவதற்காக இந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனமாவதுடன் இதுவரையில் இதற்கு உட்பட்ட பிரதேச மட்டத்தில் 19 மத்திய நிலையங்களிலும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

உயர்கல்வி தொடர்பாக மாணவர்களுக்காக வழங்கப்படும் மஹாபொல மற்றும் மாணவர் உதவி தொகை 2015ஆம் ஆண்டில் அதிகரிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவர்களுக்காக ரூபா 5000 மாதாந்த புலமைப்பரிசில் நிதி உதவியும், ரூபா 4000 மாதாந்த பல்கலைக்கழக புலமைப் பரிசிலும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மாணவர் ஒருவருக்கு 1500 ரூபா புலமைப்பரிசிலும் உரித்தாகின்றது. 

இதற்கமைவாக இலங்கை உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட மஹாபொல புலமைப்பரிசில் நிதியுதவி தவணைக்கொடுப்பனவான ரூபா 1500 வை, ரூபா 2500 வரையில் அதிகரிப்பதற்காக நகரதிட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.