மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான மற்றுமோர் உள்ளூர் விமான சேவையொன்று, இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தலைமையில், மட்டக்களப்பு விமான நிலையத்தில், இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலி சாஹீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர, வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment
Post a Comment