கையளிப்பு




(க.கிஷாந்தன்)

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கேகாலை மாவட்டத்தின் டெனிஸ்வத்த தோட்டத்தில் 48 வீடுகள் கொண்ட வீ. பீ. கணேசன் புரம் எனும் புதிய கிராமம் 10-03-2019 அன்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் தந்தையும் முன்னாள் யூனியன் தலைவரும் நடிகருமான வீ. பீ. கணேசன் அவர்களின் பிறப்பிடமானதால் ஞாபகமாக அவர்களின் பெயர் சூடப்பட்டுள்ளது.

2016 டெனிஸ்வத்த தோட்டத்தில் ஏற்ப்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜிதா விஜயமான்ன, சுஜித் பேரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் தெரனியகலை அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான அனுருத்த பொல்கம்பல, அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் மனைவி, தங்கை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டனர்.