(க.கிஷாந்தன்)
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்குஅருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியுள்ளது.
02.03.2019 அன்று மதியம் 1.30 மணி வேளையில் தீ பரவியதன் காரணமாக இந்த பகுதியில் 10 ஏக்கர் முற்றாக எரிந்துநாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாராவது தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
மலையகத்தில் தற்போது காணப்படும் அதிக வெயில் காரணமாக நீர் நிரம்பி காணப்படும் பல பகுதிகளில் கடந்த இரண்டுவாரகாலமாக இவ்வாறு தீ வைப்பதன் காரணமாக குடிநீர்க்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில் மலையகத்தில் பெரும் பகுதிகளில் குறிப்பாக நோர்வூட், வட்டவளை, தியகல போன்ற பிரதேசத்தில்உள்ள காடுகளுக்கு தீ வைப்பது அதிகரித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களின் தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்யும் படி பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment
Post a Comment