அட்டாளைச்சேனை:கிழக்கிலங்கை அரபுக் கல்லுாரியின் பட்டமளிப்பு, கட்டடத் திறப்பு




#9_வது பட்டமளிப்பு விழாவும், புதிய கட்டிட திறப்பு விழாவும்.....

அட்டாளைச்சேனை கிழக்கிழங்கை அரபுக் கல்லூரியின் 09வது பட்டமளிப்பு நிகழ்வும், புதிய கட்டிட திறப்பு விழாவும் இன்று (09) சனிக்கிழமை காலை கலாசாலை வளாகத்தில் கல்லூரியின் ஆளுனர் சபை தலைவரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், முஸ்லிம் நாடுகளின் பிரமுகர்கள், கல்லூரி ஆளுனர் சபை உறுப்பினர்கள், அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் 
33 மாணவர்கள் அல்- ஆலிம் (மெளலவி) பட்டம் வழங்கி கௌரவிக்கபடவிருக்கின்றார்கள்.