(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தில் "மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வரும் எம்.டி.ஏ.நிஸாம் என்பவருக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று (05) திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் ஆணை விண்ணப்பமொன்றை செய்த போதே நீதிபதி இக்கட்டளையை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2018 செப்டம்பர் 31ம் திகதி முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் கிழக்கு மாகாணத்தின் "மாகாண கல்வி பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர்" நியமிக்கப்பட்டார்.
இதேவேளை கிழக்கு மாகாண புதிய ஆளுநராக கடமையேற்ற கலாநிதி எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் 2019 ஜனவரி 31ம் திகதி கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் பதவியிலிருந்து எம்.கே.எம்.மன்சூர் என்பவரை எந்த விதமான காரணங்களும் இன்றி பதவியிலிருந்து நீக்கி மீண்டும் எம்.டி.ஏ.நிஸாம் என்பவரை நியமித்துள்ளார்.
2019 பெப்ரவரி 01ம் திகதி தொடக்கம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இந்நியமனத்திற்ககு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் மனுதாரரான எம்.கே.எம்.மன்சூர் வழக்கு தாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எம்.சீ.சபருள்ளா ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் ஆணை விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதில் மனுதாரர் சார்பில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை்.சலீம் ,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜீ.முத்துபண்டா மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மாகாண பணிப்பாளர் எம்.டி.ஏ.நிஸாம்,சட்டமா அதிபர் போன்றோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு நேற்றைய தினம் நீதிபதி மாணிக்க வாசகம் இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.டி.ஏ.நிஸாம் என்பவரை நேற்று ஜந்தாம் திகதியிலிருந்து மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றக்கூடாது என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.
இதேவேளை மனுதாரரான எம்.கே.எம்.மன்சூர் அவர்களை தொடர்ந்து கடமையாற்ற 2019 மார்ச் 19ம் திகதி வரை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் எதிர் மனுதாரர்களுக்கு அழைப்பு கட்டளை பிறப்பிக்குமாறும் மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
Post a Comment
Post a Comment