(க.கிஷாந்தன்)
தற்போது நாட்டில் போதை வஸ்த்து காரணமாக பல்வேறு பிரச்சனைகள் நாளாந்தம் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பாடசாலை மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாவணை மலையக பாடசாலைகளிலும் பரவி வருவதாக தெரிய வருகின்றது.
இந் நிலையில் மலையக மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் சமூகத்தின் கடமையாக இருக்கின்றது. இருந்தும் அனைத்தும் அவர்களிடம் பொறுப்பளித்து விட்டு பெற்றோர்கள் ஒதுங்கி நிற்க முடியாது. அவர்களும் தங்கள் பிள்ளைகனின் நடிவடிக்கைகள் தொடர்பில் கவனமாக இருந்து செயற்பட வேண்டியது கட்டாயமானதுடன் இதற்கு அதிபர் ஆசிரியர்களுடள் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறுகின்றார் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்.
பதுளை பாராதி தழிழ் மகா வித்தியாலயத்தின் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஊவா மாகாண முதல் அமைச்சர் சாமர சம்பந் தசநாயக்க ஊவா மாகாண சபை உறுப்பினர் வே.ருத்திரதீபன் உட்பட கல்வி அதிகாரிகள் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றௌர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
தற்போது மலையகத்தில் மாணவர்களில் கல்வி வளர்ச்சியை நோக்கி செல்கின்றது. இதற்கு அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் பங்களிப்பு பாராட்டுக்குறியது. எமது சழூகம் முன்னேர வேண்டுமானால் அது கல்வியிலேயே தங்கியுள்ளது. அதற்காக அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அரசாங்கமும் பல்வேறு திட்டகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. இதனை பயன்படுத்தி மலையக மாணவர்களின் கல்வி நிலையை அபிவிருத்தி செய்ய வேண்டியது எம் அணைவரினதும் கடமையாக இருகின்றது. இதற்கு நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவோம்
இது இவ்வாறு இருக்க தற்போது இந்த நாட்டில் போதைவஸ்து பாவனையால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இவர்களை பாதுகாக்க பாடசாலை நிர்வாகத்துடன் பெற்றௌர்களும் இணைந்து செயற்பட வேண்டும். மாணர்கள் பாடசாலையில் ஆசிரியர்ளுடன் இருக்கும் நேரத்தை விட அதிகமான நேரம் பெற்றோர்களிடையே இருக்கின்றனர். அந் நேரத்தில் அவர்களின் செயற்பாடுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். எமது மாணவர்களுக்கு இந்த விடங்கள் ஒரு புதியவையாகும். ஆரம்பத்திலேயே இதனை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அதனை விரும்பி செய்வதில்லை விற்பனை செய்பவர்களே பழக்கி வருகின்றார்கள். அது அவர்களின் வியாபார உக்தி. உங்களது பிரதேசங்களில் இவ்வாறான வியாபாரங்கள் நடைபெற்றாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமாக பாரும் செயற்பட்டாலோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரகசிய இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள். இதனை நாம் அனைவரும் செய்தாலே மாணவர்களை காப்பாற்ற முடியம். இதற்கு மலையக கல்வி சமூகத்துடன் நாம் அனைவரும் ஒன்றினைவோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment