கண்டி- பேராதனை வாகனப் போக்குவரத்தில் மாற்றம்




கண்டி நகரில் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுவத்துவதற்காக புதிய ​போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
இதற்கமைய, கண்டி- பேராதனைக்கிடையிலான வாகனப் போக்குவரத்து திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் புதிய வீதியூடாகவும் கண்டியிலிருந்து பேராதனை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பழைய வீதியூடாகவும் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.