இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் நிலை குலைந்தது,இலங்கை




இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

ஜெகனர்ஸ் போர்கில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற தென் ஆபிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. 

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் ஓசத பெர்ணான்டோ 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

தென் ஆபிரிக்கா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுக்களை 10 ஓவர்களில் வீழ்த்தியிருந்தார். 

இதன்படி தென் ஆபிரிக்கா அணிக்கு 232 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.