நாவலப்பிட்டி பிரதேசத்தில் 02.03.2019 அன்று ரயிலில் மோதச் சென்ற யுவதியொருவரை காப்பாற்ற சென்ற இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்ததோடு, குறித்த யுவதியும் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி, ஜயசுந்தர பிரதேசத்தில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த குறித்த இருவரே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு - கோட்டையில் இருந்து எல்ல நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் இந்த மாணவி மற்றும் மாணவன் மோதுண்டுள்ளனர்.
நாவலப்பிட்டி தெகிந்த பகுதியை சேர்ந்த ஹர்ஷ குமார எனும் 16 வயதுடைய மாணவனும், நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய பகுதியை சேர்ந்த பாக்யா செவ்வந்தி எனும் 15 வயதுடைய மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவன் மாணவி ஒருவருடன் ரயில் வீதியில் பயணித்து கொண்டிருந்த போது மற்றுமொரு மாணவி அவ்விடத்தில் தொலைபேசியில் பேசியவாறு சென்றுள்ளார். இதன் போது எல்ல நோக்கி பயணித்த ரயிலை அவதானித்த மாணவன் தன்னுடன் இருந்த மாணவியை காப்பாற்றிவிட்டு மற்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment