.வடமாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை!




சிவராத்திாி தினத்தை முன்னிட்டு வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் விடு முறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த அறிவிப்பை வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் விடுத்துள்ளாா். அந்த அறிவி த்தலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற் றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05.03.2019 அன்று
செவ்வாய்க்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.
மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தினத்திற்கான பதிற்பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.