இந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்துனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்




(க.கிஷாந்தன்)

இந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்துனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று இந்தியாவின் விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் எடுத்துள்ள தீர்மானமானது அவருடைய மனிதாபிமானத்தை எடுத்துக்காட்டுகின்றது இது உலகிற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா கொத்மலை  லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டிடத்தை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் 01.03.2019 அன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசோக ஏரத் மற்றும். கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 27 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராதாகிருஷ்ணன்,

இந்தியாவும் பாகிஸ்தானும்  புரிந்துனர்வுடன் நடந்து கொண்டு இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு சுமுகமான ஒரு தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்.

யுத்தத்தின் வழியை நாங்கள் நன்கு அறிவோம். யுத்தத்தால் யாருக்கும் நன்மை கிடைக்காது. அதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் மக்களே. அதன் இழப்பை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகும்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மனிதாபிமானம் நிறைந்தவர். எனவே அவர் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வார் என நான் நம்புகிறேன்.

இன்று நாடு முழுவதும் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 200 பாடசாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. இதன் மூலமாக எமது பகுதிகளுக்கும் பல கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுகின்றன.

புதிதாக வழங்கப்பட்ட இந்த அமைச்சகத்தின் மூலமாக பல்வேறு அபிவிருத்திகளை செய்ய முடியும்.குறிப்பாக எங்களுடைய மக்களுக்கு அதிக வேலைகளை செய்ய முடியும். அதனையே நானும்  எதிர்பார்க்கிறேன்.