ஜே.வி.பி முன்னாள் எம்.பி லால்காந்தவுக்கு விளக்க மறியலில்




மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் குழு உறுப்பினருமான  கே.டி லால்காந்தவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அநுராதபுரம் நீதிவான் நீதிமன்ற நீதிவான், இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம் பிரதேசத்தில், மது போதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், அவர் நேற்று (01) கைதுசெய்யப்பட்டிருந்தார்.
லால்காந்த ஓட்டிச் சென்ற கப் ரக வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் அதில் பயணித்த இரண்டு பெண்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.