அக்கரைப்பற்று சம்மாந்துறை பிரதேசங்களில் கடந்த ஒரு மாதகாலமாக அரிசி ஆலை,வீடுகளில் இருந்த நெல்மூடைகளையும் வீதிகளில் காயவைத்திருந்த நெல் மூடைகளையும் களவாடி வந்த 3 சந்தேக நபர்களையும்,அதன் கொள்வனவாளர்கள் இருவரையும்,தரகர் ஒருவரையும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ஜெயசீலன் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள், இன்று அக்கரைப்பற்று நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.எல்.ஏ.றசீத் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
குறித்த நெல்லைத் திருடிய சந்தேக நபர்களுடன் சேர்த்து அதன் கொள்வனவாளர்களும், தெரிந்து கொண்டே இந்த நெல் மூடைகளைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் அக்கரைப்பற்று பதில் நீதிபதிக்குத் தெரிவித்தனர்.
குறித்த நெல் மூட்டைகளைத் திருடிய சந்தேக நபர்களை, மார்ச் 14ந் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறும், இதேவேளை, நெல்லைக் கொள்வனவு செய்ய வியாரிகள் இருவரையும் மார்ச் 5ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் அக்கரைப்பற்று பதில் நீதிபதி எஸ்.எல்.ஏ.றசீத் இன்று அக்கரைப்பற்றுப் பொலிசாருக்கு கட்டளையிட்டார்.
Post a Comment
Post a Comment