மே மாதம் 1 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா விஷேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவை ஆவணம் அடுத்தவார அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment