அக்கரைப்பற்றிலும் அயற் கிராமங்களிலும் 300 நெல்மூட்டைகளைத் திருடியோர் கைது





(குற்றவியல் செய்தியாளர் -#எஸ்.ரி.ஜமால்டீன்)
அக்கரைப்பற்று சம்மாந்துறை பிரதேசங்களில் கடந்த ஒரு மாதகாலமாக அரிசி ஆலை,வீடுகளில் இருந்த நெல்மூடைகளையும் வீதிகளில் காயவைத்திருந்த நெல் மூடைகளையும் களவாடி வந்த கும்பல் ஒன்றை அக்கரைப்பற்று பொலிசார் இன்று (02.03.2019) காலை கைது செய்ததாக தெரிவித்தனர்.

பிபிலை,காத்தான்குடி.அக்கரைப்பற்று.சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதேசங்களை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து 300 மூடை நெல்லும் இரு லொறிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்வர்கள் நாளை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவள்ளதாகவும் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றில் கடற்கரைவீதி ,பள்ளிக்குடியிருப்பு,இசங்காணிச்சீமை ஆகிய இடங்களிலும் பாலமுனை துறைமுக வீதியிலும்,சம்மாந்துறை விரமுனை பிரதேசங்களிலும்  இரவு நேரங்களில் நெல்மூடைகளை களவாடி அரிசி ஆலைகளுக்கு  விற்பனை செய்து வந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



மேலதிக தகவல்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி-ரி.ஜெயசீலன் 0776069741,0672277239



எஸ்.ரி.ஜமால்டீன்-அக்கரைப்பற்று