கடுவலை - பியகம வீதி தற்காலிகமாக மூடப்படுகிறது




கடுவலை பாலத்தில் அவசர திருத்தப் பணி மேற்கொள்ள உள்ளதால் கடுவலை - பியகம வீதி 05 நாட்களுக்கு இரவு வேளையில் வாகனப் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று முதல் எதிர்வரும் 02ம் திகதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 05 மணிவரை இவ்வாறு மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக கடுவலை - பியகம வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

மாற்று வழியாக அதிவேக வீதியின் மேம் பாலத்தை சாரதிகள் பயன்படுத்தலாம் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.